“இப்படியும் ஒரு சுயநல உலகமா..?” பசியால் சுருண்டு விழுந்த நபரை மிதித்துச் சென்ற மனிதர்கள்.. பெண் செய்த நெகிழ்ச்சியான காரியம்.. குவியும் பாராட்டுக்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இப்படியும் ஒரு சுயநல உலகமா..?” பசியால் சுருண்டு விழுந்த நபரை மிதித்துச் சென்ற மனிதர்கள்.. பெண் செய்த நெகிழ்ச்சியான காரியம்.. குவியும் பாராட்டுக்கள்..!!

Published

on

டெல்லி ரயில் நிலையத்தில் நள்ளிரவில் அரங்கேறிய நெஞ்சை நெகிழ வைக்கும் மனிதநேயச் சம்பவம் குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அந்த வீடியோவில், நள்ளிரவு நேரத்தில் ரயில் நிலைய நடைமேடையில் ஏழை மனிதர் ஒருவர் பசியாலும் சோர்வாலும் தரையில் சுருண்டு கிடந்துள்ளார். அந்த வழியே சென்ற நூற்றுக்கணக்கான மக்கள் அவரைக் கண்டும் காணாதது போல் கடந்து சென்றதோடு, சிலர் அவரது உடலின் மீதே ஏறி மிதித்துச் செல்லும் அளவிற்கு இரக்கமற்று நடந்து கொண்டுள்ளனர். மேலும், அந்த இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி யாரோ ஒரு நபர் அவரது காலணிகளையும் திருடிச் சென்றுள்ளனர். இதனால் காலில் செருப்புக் கூட இல்லாமல், மிகவும் பரிதாபகரமான நிலையில் அந்த மனிதர் தவித்துக் கொண்டிருந்தார்.

சுற்றிலும் இருந்த உலகம் சுயநலமாக அவரைக் கடந்து சென்ற போது, அங்கு வந்த ஒரு பெண்மணி மட்டும் மனிதாபிமானத்துடன் அந்த இடத்தை விட்டு நகர மறுத்து நின்றார். அவர் உடனடியாக முன்னோக்கிச் சென்று, தரையில் கிடந்த அந்த மனிதரைத் தனது கைகளால் தூக்கி நிறுத்தி, அவருக்கு ஆறுதல் கூறினார். அதோடு நிறுத்தாமல், பசியால் வாடிக் கொண்டிருந்த அவரைத் தன்னோடு அழைத்துச் சென்று அன்போடு உணவளித்து அவரது பசியைப் போக்கியுள்ளார். சக மனிதனின் துயரைக் கண்டு மக்கள் விலகிச் சென்ற வேளையில், அந்தப் பெண்மணியின் இந்த ஒரு சிறு முயற்சி, இந்த உலகத்தில் இன்னும் மனிதநேயம் முழுமையாகச் சாகவில்லை என்பதை உலகுக்கு உரக்கச் சொல்லியிருக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in