“இது சரிப்பட்டு வராது” தவெக-வில் அதிருப்தி..! மீண்டும் அதிமுகவுக்குத் தாவும் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பத்..? அள்ளத் தயாராகும் இபிஎஸ் குழு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இது சரிப்பட்டு வராது” தவெக-வில் அதிருப்தி..! மீண்டும் அதிமுகவுக்குத் தாவும் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பத்..? அள்ளத் தயாராகும் இபிஎஸ் குழு..!!

Published

on

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் பலர், தங்களுக்கு எதிர்பார்த்த முக்கியப் பதவிகள் கிடைக்காததால் கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. தவெக ஆட்சி அமைத்த போதிலும், தங்களுக்குக் கட்சியில் உரிய அங்கீகாரமோ அல்லது பொறுப்புகளோ வழங்கப்படவில்லை என்ற ஏமாற்றத்தில் இந்த மூத்த நிர்வாகிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, முன்னாள் அமைச்சர்களான செம்மலை, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜூ மற்றும் வைகைச்செல்வன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், மீண்டும் அதிமுக பக்கமே சென்றுவிடலாமா என்பது குறித்துத் தங்களுக்குள் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. தவெக-வில் நிலவும் இந்த அதிருப்தி அலையை அதிமுக தலைமை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisement

ஏற்கனவே, கட்சியை விட்டு விலகிச் சென்ற நிர்வாகிகளை மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் நோக்கில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) ஒரு தனிக் குழுவை அமைத்திருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்தச் சூழ்நிலையில், தவெக-வில் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் தாய் கழகமான அதிமுகவிற்கே திரும்பினால், அது தமிழக அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in