“அடுத்து பாளையம்கோட்டையா..? சேலமா..? inky pinky ponky போட்டு தப்பிக்கும் கைதிகள்…” டம்மி அரசுக்கு எதிராக உதயநிதி அடித்த சிக்ஸர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடுத்து பாளையம்கோட்டையா..? சேலமா..? inky pinky ponky போட்டு தப்பிக்கும் கைதிகள்…” டம்மி அரசுக்கு எதிராக உதயநிதி அடித்த சிக்ஸர்..!!

Published

on

இன்றைய சோப்ளாங்கி ஆட்சியில் புழல் மற்றும் தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார். அடுத்து பாளையம்கோட்டையா அல்லது சேலமா என்று கைதிகள் ‘inky pinky ponky’ போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு இந்த டம்மி முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் அமைந்திருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும், தோல்வி பயத்தின் காரணமாக இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடிக் கொண்டிருக்கிறார் என்றும், மறுபுறம் கைதிகளோ இது ஒரு கையாலாகாத அரசு என்பதைத் தெரிந்துகொண்டு சிறையிலிருந்து தப்பி ஓட்டம் பிடிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இனி சிறைத்துறை அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்வதோ அல்லது சஸ்பெண்ட் செய்வதோ என்றால், முதலமைச்சர் தன்னைத்தானே தான் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Advertisement

இறுதியாக, ‘மெத்’ அரசின் மெத்தனப் போக்கின் காரணமாகத் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து பெரிய கேள்விக்குறியாகி வருவதைச் சுட்டிக்காட்டி, இதற்குத் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்வதாகவும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in