LATEST NEWS
“டிராக்டர் ஓட்ட நேரமிருக்கு… ஆய்வுக்கூட்டம் நடத்த நேரம் இல்லையா..?” சாம்பிளுக்குக்கூட சட்டம் ஒழுங்கு இல்லை..! முதல்வர் விஜையை வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்..!!
அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் மே 4-க்குப் பிறகு சட்டம் – ஒழுங்கு என்பது சாம்பிளுக்குக் கூட இல்லை என்பது மிகப்பெரிய வேதனை. நாளிதழ்களில் இன்றைய கொலைப்பட்டியல் என்று தனி வரிசை போடும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் கொலைகள் எல்லை மீறி நடக்கின்றன. சமீபத்தில் மதுரை மேலூர் அருகே மாயமான 7 வயது சிறுவன், உடலில் காயங்களோடு சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருக்கிறான். சேலத்தில் ரவுடி டேவிட் என்பவரை பட்டப்பகலில் ஒரு கும்பல் வெட்டிக்கொலைச் செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு கல்லூரி மாணவனை வெட்டிக்கொலை செய்துள்ளனர். த.வெ.க.வினரும் தங்களது க்ரைம் கோட்டா-வை விட்டுக்கொடுப்பதில்லை என்பதற்கு சாட்சியாக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க பெண் நிர்வாகி ஒருவர், கணவனையே கொலைச் செய்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள ஒரே தொகுதியில் 40 இடங்களுக்குப் போய் டிராக்டர் ஓட்டி, டீ குடித்து, முருங்கைப் பறித்த முதல்வர், சட்டம் – ஒழுங்கைக் காப்பாற்ற ஒரே ஒரு ஆய்வுக்கூட்டத்தையாவது நடத்துவாரா? ஒருவேளை அத்தகைய கூட்டங்களை நடத்தி இருந்தால் இன்னும் கொலைகள் தொடர்வது ஏன்? டம்மி முதல்வரின் ஆசியோடு தான் தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
