CRIME
“நெருக்கமாக இருந்தபோதே கைகால்களைக் கட்டி…” காதலனைத் தீர்த்துக்கட்ட முன்னாள் காதலனுடன் போட்ட கொடூர ‘ஸ்கெட்ச்’.. ஹார்ட் டிஸ்க்கில் என்ன இருந்தது..? கதி கலங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில், முன்னாள் காதலனுடன் சேர்ந்து கொண்டு, தன்னுடன் லிவ்-இன் உறவில் இருந்த தற்போதைய காதலனைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு வீட்டைத் தீயிட்டுக் கொளுத்திய 21 வயது தடய அறிவியல் மாணவி அம்ரிதா சவுகானின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வந்த ராம்கேஷ் மீனா என்ற இளைஞருடன் அம்ரிதா லிவ்-இன் உறவில் இருந்துள்ளார். சில மாதங்களுக்குப் பிறகு, மொராதாபாத்தில் எல்பிஜி சிலிண்டர் தொழில் செய்யும் தனது முன்னாள் காதலன் சுமித் காஷ்யப்புடன் அம்ரிதாவிற்கு மீண்டும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போதைய காதலன் ராம்கேஷை விட்டு அம்ரிதா விலக முயன்றபோது, அவரிடமிருந்த தங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கைத் தர ராம்கேஷ் மறுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அந்த ஹார்ட் டிஸ்க்கைக் கைப்பற்றவும் ராம்கேஷை வழியிலிருந்து அகற்றவும் அம்ரிதா ஒரு கொடூரமான சதித்திட்டத்தைத் தீட்டியுள்ளார். மீண்டும் ராம்கேஷிடம் காதலிப்பது போல் நடித்து, அவருடன் நெருக்கமாக இருந்த சமயத்தில் அவரது கைகால்களைக் கட்டிப் போட்டுள்ளார்; பின்னர் தனது முன்னாள் காதலன் சுமித் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் குமாருடன் சேர்ந்து ராம்கேஷைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். மேலும், கொலையை மறைப்பதற்காக ஒட்டுமொத்த வீட்டிற்கும் தீ வைத்துள்ளனர். அம்ரிதாவின் தவறான நடத்தைகளால் ஏற்கனவே மனமுடைந்த அவரது பெற்றோர், இந்தச் சம்பவத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பே அவரைத் தங்களது மகள் அல்ல என்று செய்தித்தாள் விளம்பரம் மூலம் முறைப்படி குடும்பத்தை விட்டு ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
