CRIME
“வயிற்றில் இருப்பது பெண் குழந்தை..” இரகசியமாக நடந்த சோதனை… 24 மணி நேரத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. திடுக்கிடும் பின்னணி..!!
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில், வயிற்றில் வளர்வது பெண் குழந்தை என்று தெரிந்ததால் கட்டாயப்படுத்தி சட்டவிரோதமாகக் கலைக்கப்பட்டதில், 24 வயது இளம்பெண் சிகிச்சை பலனின்றி 24 மணி நேரத்திற்குள் உயிரிழந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தன்பாத் பகுதியின் சியாம்தி சௌக்கில் உள்ள ‘சென்ட்ரல் டயக்னோஸ்டிக் சென்டரில்’ சோனு கேவத் என்பவருக்கும் கிரண் குமாரிக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கிரண் கர்ப்பமடைந்ததைத் தொடர்ந்து, ஆண் குழந்தை வேண்டும் என்ற பேராசையில் அவரது கணவர் மற்றும் புகுந்த வீட்டினர், சட்டவிரோதமாகப் பாலின நிர்ணயச் சோதனை நடத்தியுள்ளனர். சோதனையில் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்று தெரிந்ததும், கிரணைக் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளனர்.
தகுந்த மருத்துவ நிபுணர்கள் இல்லாமல் கள்ளத்தனமாகச் செய்யப்பட்ட இந்த பாதுகாப்பற்ற கருக்கலைப்பின் போது, கிரணுக்குக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்துள்ளது. உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதிலும், சிகிச்சை பலனின்றி 24 மணி நேரத்திற்குள்ளாகவே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். . இக்கொடூரம் குறித்துப் பலியான பெண்ணின் தந்தை ராஜேந்திர குமார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, உயிரிழப்புக்குக் காரணமான கணவர் சோனு கேவத், டயக்னோஸ்டிக் மையத்தின் உரிமையாளர், ஊழியர் மற்றும் அரசு மருத்துவமனை செவிலியர் உட்பட நான்கு பேரைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
