CRIME
“என் தங்கையையா வம்பிழுக்கிறாய்..?” நடுரோட்டில் இளைஞர் கதற கதற கும்பலின் வெறி செயல்.. இணையத்தில் வைரலாகும் கொடூர வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் வன்முறை வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவரைச் சில நபர்கள் சூழ்ந்துகொண்டு கொடூரமான முறையில் தாக்குகின்றனர். அவரை கீழே தள்ளி, கால்களாலும் கைகளாலும் சரமாரியாக உதைத்துத் தள்ளுகின்றனர். தாக்குதல் நடத்தும் நபர்கள், “என் சகோதரியையா வம்பிழுக்கிறாய்?” என்று ஆக்ரோஷமாகக் கேடான வார்த்தைகளால் வசித்துக் கொண்டே அடிக்கின்றனர். ஆனால், அடி வாங்கும் இளைஞரோ, “இல்லை, நான் அவளை வம்பிழுக்கவில்லை” என்று அலறியபடி கெஞ்சுகிறார். இந்த ஒட்டுமொத்த கொடூரச் சம்பவமும் அங்குள்ளவர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இந்த வன்முறை வீடியோவைப் பகிர்ந்து வைரலாக்கியதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பது குறித்துப் பலத்த கேள்விகள் எழுந்துள்ளன. குற்றவாளிகள் தங்களின் பலத்தைக் காட்டுவதற்காகவும், மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பயத்தையும் பரப்புவதற்காகவும் இந்த வீடியோவை திட்டமிட்டு வைரலாக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த வீடியோ உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தது என்று பரவலாகக் கூறப்பட்டாலும், காவல் துறையினரால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், இத்தகைய வன்முறை மற்றும் கேடான வார்த்தைகள் அடங்கிய வீடியோக்கள் இணையத்தில் பரவுவது சமூக அமைதிக்குக் பெரும் சவாலாக மாறியுள்ளது.
