“டிரம்பை குப்பைத்தொட்டியில் வீசி” அமெரிக்காவை பகிரங்கமாக வம்புக்கு இழுத்த ஈரான் தூதரகம்.. டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்திய சமூக வலைத்தளப் பதிவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“டிரம்பை குப்பைத்தொட்டியில் வீசி” அமெரிக்காவை பகிரங்கமாக வம்புக்கு இழுத்த ஈரான் தூதரகம்.. டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்திய சமூக வலைத்தளப் பதிவு..!!

Published

on

அமெரிக்க இடைத்தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சிக்குத் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் அவரை எள்ளிநகையாடும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு நையாண்டி வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. புதுடெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், கோட்-சூட் அணிந்த சிலர் டொனால்ட் டிரம்பை தூக்கிச் சென்று “அபாயகரமான கழிவு” என்று எழுதப்பட்ட ஒரு பெரிய குப்பைத் தொட்டியில் போடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ள சூழலில், இந்த வீடியோவை பதிவிட்டு “அமெரிக்க இடைத்தேர்தல்” என ஈரான் தூதரகம் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளது. வாஷிங்டன் மற்றும் டெஹ்ரான் இடையே ஏற்கனவே நிலவி வரும் தீவிரமான அரசியல் மற்றும் புவிசார் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சர்வதேச தூதரகம் நாட்டின் அதிபரை இப்படி பகிரங்கமாக சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வீடியோ வெளியிட்டிருப்பது உலகளவில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in