ஒன்னா… ரெண்டா… 12 பிளாட்டுகள், கிலோ கணக்குல தங்கம்..! வறுமை ஒழிப்பு அதிகாரியிடம் ரூ.100 கோடி சொத்துகள்… கதவைத் தட்டி சல்லடை போட்டுத் தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை..!! – cinefeeds
Connect with us

CRIME

ஒன்னா… ரெண்டா… 12 பிளாட்டுகள், கிலோ கணக்குல தங்கம்..! வறுமை ஒழிப்பு அதிகாரியிடம் ரூ.100 கோடி சொத்துகள்… கதவைத் தட்டி சல்லடை போட்டுத் தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை..!!

Published

on

தெலுங்கானாவில் நகராட்சி பகுதிகளுக்கான வறுமை ஒழிப்பு திட்டத்தின் கூடுதல் இயக்குநராக இருப்பவர் யாதகிரி ராவ் நல்லகுண்ட்லா. இவருடைய வீடு, அலுவலகம், வங்கி லாக்கர்கள் மற்றும் இவருடன் தொடர்புடையவர்களின் இடங்களில் தெலுங்கானாவின் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, ஐதராபாத் மற்றும் சூர்யாபேட்டையில் ரூ.58.63 லட்சம் மதிப்பிலான 12 பிளாட்டுகள், உப்பலில் ரூ.31.36 லட்சம் மதிப்பிலான 2 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ரூ.2 கோடி மதிப்பிலான ஒரு குடியிருப்பு கட்டிடம் ஆகியவற்றுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், சூர்யாபேட்டையில் ஒரு வீடு, உப்பலில் ஒரு வணிக கடை, 1,792.2 கிராம் எடையுள்ள தங்க நகைகள், வெள்ளி நகைகள், 2 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் கண்டறியப்பட்டன.

Advertisement

இது தவிர வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளில் இருந்த இருப்புத்தொகை என அனைத்தையும் சேர்த்து ஒட்டுமொத்த சொத்துகளின் மதிப்பை ரூ.4,75,61,171 என ஊழல் தடுப்பு பிரிவு கணக்கிட்டுள்ளது. எனினும், இந்த சொத்துகளின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.100 கோடி வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அதிகாரி யாதகிரிக்கு எதிராக முறைகேடான சொத்து குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in