CRIME
“மளிகைக் கடைக்குச் சென்ற 5 வயது சிறுமி.. பின் தொடர்ந்த காம மிருகம்..” லிப்ட் அருகே நடந்த பயங்கரம்.. நீதிமன்றத்தின் மரண அடி தீர்ப்பு..!!
தெலங்கானா மாநிலம் மியாப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட மார்த்தாண்டா நகரில் கடந்த 2021 ஆம் ஆண்டு 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து ரங்காரெட்டி மாவட்ட சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சம்பவத்தன்று மளிகைக் கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய அந்தச் சிறுமியை, கச்சிபௌலியில் பாதுகாப்புப் காவலராக வேலை பார்த்து வந்த கீலா தர்மா என்ற நபர் பின்தொடர்ந்துள்ளார். சிறுமி தனது அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்ததும், அங்குள்ள மின்தூக்கி அருகே வைத்து அந்தப் பிஞ்சுச் சிறுமியைக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் மூலம் முக்கிய ஆதாரங்களைச் சேகரித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் மற்றொரு சாட்சி மூலமாக குற்றவாளி கீலா தர்மா அடையாளம் காணப்பட்டு, கடந்த 2021 ஆகஸ்ட் 17 அன்று கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை போக்ஸோ சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
