CRIME
“என்னைத் திருமணம் செய்துகொள்..!” ஆசிரியருக்கு நேர்ந்த பரிதாபக் கதி… பள்ளி மேலாளரின் செய்த கொடூர காரியம்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியாவில் பள்ளி ஆசிரியை ராணி விஸ்வகர்மா என்பவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே பள்ளியின் மேலாளரான விஜய் நிஷாத் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். ஆசிரியை ராணி விஸ்வகர்மா தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு விஜய் நிஷாத்தை வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் திருமண அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில், விஜய் நிஷாத் தனது காரின் நடு இருக்கையில் வைத்து ஆசிரியையின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இந்தக் கொலையைச் செய்த பிறகு, விஜய் நிஷாத் ஆசிரியையின் சடலத்தைக் காரின் டிக்கிக்குள் மறைத்து வைத்துவிட்டு, யாருக்கும் சந்தேகம் வராதவாறு நாள் முழுவதும் தியோரியா நகரம் முழுவதும் காரிலேயே சுற்றியுள்ளார் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த விபரீதக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான பள்ளி மேலாளரைக் கைது செய்துள்ள தியோரியா போலீசார், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் சடலத்தை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
