CRIME
“அறைக்குள் மகளுடன் இருந்த 22 வயது வாலிபர்.. ஆத்திரத்தில் தொழிலதிபரின் வெறிச்செயல்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் எலஹங்கா பகுதியில், தொழிலதிபர் ஆனந்தராஜ் (45) என்பவர் தனது மகளுடன் இருந்த ஃபேக்டரி ஊழியரான கிரண் (22) என்ற இளைஞரை ஆத்திரத்தில் அடித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆனந்தராஜின் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த கிரண், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆனந்தராஜின் 19 வயது மகளுடன் ஒரு அறையில் இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குத் திரும்பிய தொழிலதிபரும் அவரது மனைவியும் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, ஆத்திரத்தில் கிரணை மிகக் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கிரண் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்தக் கொடூரக் கொலை தொடர்பாகத் தொழிலதிபர் ஆனந்தராஜைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு படுகொலை என்று விவரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், உயிரிழந்த கிரணின் குடும்பத்தினரும் இது ஒரு திட்டமிட்ட கொலைச் சதி என்று குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வழக்கின் பின்னணியில் உள்ள முழுமையான உண்மைகளைக் கண்டறிய எலஹங்கா போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
