LATEST NEWS
“ஐயோ அம்மா…” ஒரே நொடியில் சுக்குநூறான கபாப் கடை… கொதிக்கும் எண்ணெயில் அலறிய 3 பேர்..! காரை நிறுத்தப்போய் நேர்ந்த பேராபத்து..! பதறவைக்கும் பகீர் வீடியோ..!!
பெங்களூரு புறநகர் பகுதியான பன்னர்கட்டா அருகே கார் ஓட்டிய பெண் ஒருவர், திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டதால் பிரேக்கிற்குப் பதிலாக ஆக்ஸிலரேட்டரை மிதித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த எஸ்.யூ.வி கார் ஒன்று, சாலையோர கபாப் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்தச் சம்பவம் கடந்த அக்டோபர் 28 அன்று ஹோம்மதேவனஹள்ளி, சி.கே. பாளையா சாலையில் உள்ள ‘ஹாலேவரு கபாப் சென்டர்’ அருகே நிகழ்ந்துள்ளது. சஜினா பேகம் என்பவர் ஓட்டி வந்த மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட்ஸ் கார், முதலில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. பின்னர் கடையின் கவுண்டர் மீது மோதியதில், அங்கு சூடாக கொதித்துக் கொண்டிருந்த சமையல் எண்ணெய் பாத்திரம் கவிழ்ந்தது. இதனால் கடை ஊழியர் பசவராஜ் மற்றும் வாடிக்கையாளர்களான முனிகிருஷ்ணா, மங்கேஷ் ஆகிய மூன்று பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
காயமடைந்தவர்கள் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரண்டு நாள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர். காரை ஓட்டிய சஜினா பேகம் கடையின் வழக்கமான வாடிக்கையாளர் என்றும், சம்பவத்தன்று தனக்கு ஏற்பட்ட தலைச்சுற்றல் காரணமாக குழப்பத்தில் பிரேக்கிற்குப் பதிலாக ஆக்ஸிலரேட்டரை மிதித்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இதற்கிடையில், சேதமடைந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் பரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், பன்னர்கঘাট போலீசார் காரைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
