பகீர்.! “மனைவி செஞ்ச ஒரு தப்பு” ஒவ்வொருவராக வரவழைத்து குடும்பத்தோடு 7 பேரை கொடூரமாக கொ** கணவர்.. குழந்தையை கூட விட்டுவைக்கல… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

பகீர்.! “மனைவி செஞ்ச ஒரு தப்பு” ஒவ்வொருவராக வரவழைத்து குடும்பத்தோடு 7 பேரை கொடூரமாக கொ** கணவர்.. குழந்தையை கூட விட்டுவைக்கல… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

Published

on

பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவி, குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைத் திட்டமிட்டுத் தவணை முறையில் கொடூரமாகக் கொலை செய்த கேப் டிரைவரை ராஜாஜிநகர் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஸ்ரீராம்புரத்தைச் சேர்ந்த இந்துசேகர் என்ற அந்த ஓட்டுநர், தனது பேச்சை மீறி மனைவி அவரது குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்து இந்த விபரீத முடிவை எடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை வெறியில் இருந்த இந்துசேகர், முதலில் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, மனைவியின் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களைப் பல்வேறு காரணங்களைக் கூறி நயவஞ்சகமாகத் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த அவர்கள் அனைவரையும் இரும்புப் பொருளால் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

Advertisement

பின்னர், கொலை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களையும் காவல்துறையினரிடம் சிக்காமல் இருப்பதற்காக, பெங்களூரு அருகே உள்ள நந்தி ஹில்ஸ் பகுதியில் வெவ்வேறு இடங்களில் வீசி எறிந்துள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் தொடர் கொலைச் சம்பவம் குறித்து ராஜாஜிநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, உடல்களை மீட்கும் பணியிலும் தீவிர விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in