CRIME
“கழுத்து, தாடையில் 10 கத்திக் குத்துகள்..” மனைவியைக் கொடூரமாகக் கொன்றுவிட்டு கணவன் செய்த காரியம்.. 5 வருடக் காதலுக்கு நேர்ந்த கொடூர முடிவு.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!
சென்னை பாலவாக்கத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த குடும்பத் தகராறில், 33 வயதான தனது மனைவி முத்துப்பிரியாவைத் தைரியமாகக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, கணவர் விவேக் (38) நீலாங்கரை காவல் நிலையத்தில் சரணடைந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பி.எஸ்சி பட்டதாரியான முத்துப்பிரியாவிற்கும், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆடம்பர ஹோட்டல் ஓட்டுநரான விவேக்கிற்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்குத் திருவெண்பா என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு பாலவாக்கத்தில் வாடகை வீட்டிற்குக் குடியேறிய இந்த தம்பதிக்கு இடையே, திருமணத்திற்கு முன்பே முத்துப்பிரியா தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி விவேக் தொடர்ந்து அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று ஏற்பட்ட புதிய தகராறில், ஆத்திரமடைந்த விவேக் முத்துப்பிரியாவைக் கீழே தள்ளி சமையலறை கத்தியால் அவரது கழுத்து மற்றும் தாடைப் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கொடூரமாகக் குத்தியுள்ளார்; இதில் முத்துப்பிரியா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கொலைக்குப் பின், விவேக் தனது குழந்தையை முடிச்சூரில் உள்ள தனது சகோதரர் வினோத்தின் வீட்டில் விட்டுவிட்டு, நீலாங்கரை காவல் நிலையத்திற்குச் சென்று தன் மனைவியைக் கொன்றதாகக் கூறி சரணடைந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விவேக் மூன்று மாதங்களுக்கு முன்பு மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மனநலப் பிரச்சினைக்காகச் சிகிச்சை பெற்றதும், வீட்டிற்குத் திரும்பிய பின் வெறும் 10 நாட்கள் மட்டுமே மருந்துகளை உட்கொண்டதும் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் விவேக்கைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
