கலியுக கொடுமை.. இளம் பெண்ணைக் கட்டிப்போட்டு காமுகன் கொடூர காரியம்.. வீட்டிற்குள் புகுந்து அட்டூழியம்.. பதறவைக்கும் பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

கலியுக கொடுமை.. இளம் பெண்ணைக் கட்டிப்போட்டு காமுகன் கொடூர காரியம்.. வீட்டிற்குள் புகுந்து அட்டூழியம்.. பதறவைக்கும் பகீர் சம்பவம்..!!

Published

on

ஹைதராபாத் துண்டிகல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இளம் பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்த சமயத்தை பயன்படுத்தி, ஒரு நபர் அவரைப் பலவந்தமாக அறைக்குள் இழுத்துச் சென்று கைகளைக் கால்களைக் கட்டிப் போட்டு மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது அந்தப் பெண் உடைந்த பாட்டிலைக் காட்டித் தற்காப்புக்காகப் போராடியதால், ஆத்திரமடைந்த குற்றவாளி அவரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இந்த பயங்கரமான சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் சத்தம் போடத் தொடங்கியதும், பிடிபடுவதைத் தவிர்க்கக் குற்றவாளி அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.

இருப்பினும், பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு உடனே அங்கு திரண்ட உள்ளூர் பொதுமக்கள், தப்பியோட முயன்ற குற்றவாளியை மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்து துண்டிகல் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைக் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொடூரமான சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in