நண்பனே எமனான கொடூரம்.. ஒன்றாக மது அருந்திய 23 வயது வாலிபர் செய்த பயங்கர காரியம்.. நடுங்க வைக்கும் சிசிடிவி..!! – cinefeeds
Connect with us

CRIME

நண்பனே எமனான கொடூரம்.. ஒன்றாக மது அருந்திய 23 வயது வாலிபர் செய்த பயங்கர காரியம்.. நடுங்க வைக்கும் சிசிடிவி..!!

Published

on

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் பேருந்து நிலையம் அருகே, மது போதையில் ஏற்பட்ட தகராறில் 23 வயது இளைஞர் ஒருவரை அவரது நண்பரே கல்லைத் தலையில் போட்டு கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜஹிராபாத் பகுதியைச் சேர்ந்த மட்டி சுதாகர் என்ற 23 வயது இளைஞர், கரீம்நகர் டவுன் மஞ்சேரியல் கூட்ரோடு பகுதியில் உள்ள ஒரு ஃபாஸ்ட் புட் கடையில் வேலை பார்த்து வந்தார். அவரும், கர்கானாகட்டா பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம் பேக் என்ற அவரது நண்பரும் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு இருவரும் கரீம்நகர் பேருந்து நிலையம் அருகே மது அருந்திக்கொண்டிருந்தபோது, அவர்களுக்கு இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மது போதையில் இருந்த சித்து, தனது நண்பர் இப்ராஹிம் பேக்கின் குடும்பத்தினரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இப்ராஹிம் பேக், அங்கிருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து சித்துவின் தலையில் ஓங்கி அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து பேருந்து நிலைய ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில், கரீம்நகர் டவுன் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சித்துவின் உடலைக் கைப்பற்றினர். மேலும், இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளி இப்ராஹிம் பேக்கை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in