LATEST NEWS
அய்யோ கொடுமையே..! குளிக்கச் சென்ற இடத்தில் நடந்த கொடூரம்… கிணற்றில் மூழ்கி தந்தையும் மகளும் பரிதாப பலி… கண்ணீரில் மூழ்கிய குடும்பம்..!!
ஜார்க்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியின் சான்ஹோ காவல் நிலையப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை ஒரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு கிணற்றில் குளித்தபோது தந்தையும் அவரது 10 வயது மகளும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் சோரேயா கோல்பாராவைச் சேர்ந்த அர்ஜுன் ஓரோன் மற்றும் அவரது மகள் அகஸ்தியா ஓரோன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த திடீர் விபத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் கிராம மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெள்ளிக்கிழியன்று அர்ஜுன் ஓரோன் தனது மகளுடன் கிராமத்தில் உள்ள கிணற்றில் குளிப்பதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெகுநேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டு தேடத் தொடங்கினர். அப்போது வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் வயல்வெளியில் உள்ள கிணற்றுக்கு வெளியே அவர்களின் ஆடைகளும் செருப்புகளும் கிடப்பதை கிராம மக்கள் கண்டனர்.
இதையடுத்து கிராம மக்கள் கிணற்றில் தேடியதில் தந்தை மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டன. தகவல் அறிந்ததும் சான்ஹோ காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த அர்ஜுன் ஓரோன் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்ததால், இந்த எதிர்பாராத விபத்தால் அவரது குடும்பத்தின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
