“நீங்க போரை தொடங்குங்க… நாங்க நரகத்தை காட்டுறோம்..” டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் கொடுத்த தெறிக்கவிடும் பதிலடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நீங்க போரை தொடங்குங்க… நாங்க நரகத்தை காட்டுறோம்..” டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் கொடுத்த தெறிக்கவிடும் பதிலடி..!!

Published

on

அமெரிக்கா நினைத்தால் ஒரு மணி நேரத்தில் ஈரான் முழுவதுமாக அழிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் தாக்குதலை தொடங்கினால் நரகத்தை பார்ப்பீர்கள் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா ஈரான் போர் கடந்த எட்டு மாதங்களாக நடைபெற்று வரும் சூழலில், கடல்வழி வர்த்தகத்தில் இடையூறு ஏற்பட்டு கச்சா எண்ணெய் விலையானது உலகளவில் அதிகரித்து காணப்படுகிறது. இதன்காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா தனது ராணுவ படைகளை நிறுத்தி, அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டுமானால், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிடவேண்டும் என்றும், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது. இதுகுறித்து அதிபர் டிரம்ப் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தேவைப்பட்டால் தாக்குதல்களை தொடர தயாராக இருப்பதாகவும், ஹார்முஸ் ஜலசந்தியில் மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் எச்சரித்தார். ஈரானில் உள்ள 38 நிலைகள் மீது தாக்குதலை நடத்த தயாராக இருப்பதாகவும், சொல்லப்போனால் ஒரு மணி நேரத்தில் அதனை முழுவதுமான அழித்துவிட முடியும் எனவும் டிரம்ப் கூறினார்.

Advertisement

இந்த நிலையில் அமெரிக்காவின் விஷயத்தில், நாங்கள் மெத்தனமாக இருக்கமாட்டோம் என ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறுகையில், “நீங்கள் போரை தொடங்குங்கள், அப்போது எங்கள் வீரர்கள் உங்கள் மீது நரகத்தை மழையாக பொழிவார்கள்” என பதிலளித்துள்ளார். மேலும் அமெரிக்கா தவறு செய்தால், ஈரானின் பதிலடி பேரழிவாகவும் கடுமையாகவும் இருக்கும் என ஐ.ஆர்.ஜி.சி. பிரிகேடியர் ஜெனரல் அலி பெலாலி தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in