பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..!! – cinefeeds
Connect with us

CINEMA

பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..!!

Published

on

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் ஷாஜிகுமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாகக் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஆலப்புழாவில் நடிகர் திலீப் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தபோது, அவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அங்கு முதலுதவி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காகக் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிர் பிரிந்தது.

மலையாளத் திரையுலகில் மோகன்லால் நடித்த சூப்பர் ஹிட் படங்களான ‘புலிமுருகன்’, ‘ஒடியன்’ உட்பட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக ஷாஜிகுமார் பணியாற்றியுள்ளார். மேலும் தமிழிலும் தடம் பதித்த இவர், நடிகர் பிரசாந்த் நடித்த ‘பொன்னர் சங்கர்’, ‘மம்பட்டியான்’, ‘சாகசம்’ உள்ளிட்ட பல முக்கியத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து சினிமா துறையில் தனக்கென தனி அங்கீகாரத்தைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in