“ரிக்‌ஷா ஜோடியா இது?” விமர்சனங்களைத் தூக்கி எறிந்த அன்பு… கேலி செய்தவர்களின் வாயை அடைத்த தரமான சம்பவம்… வைரலாகும் புதிய வீடியோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ரிக்‌ஷா ஜோடியா இது?” விமர்சனங்களைத் தூக்கி எறிந்த அன்பு… கேலி செய்தவர்களின் வாயை அடைத்த தரமான சம்பவம்… வைரலாகும் புதிய வீடியோ..!

Published

on

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த அபிஷேக் முகர்ஜி மற்றும் அவரது மனைவி, துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது தங்களது மகனுடன் சாதாரண ரிக்ஷாவில் பயணம் செய்த வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலானது. குடும்பத்தினர் அனைவரும் உற்சாகமாகப் பாடிக்கொண்டு சென்ற அந்த அழகான தருணம் பலரது மனதைக் கவர்ந்தாலும், மறுபுறம் சிலர் அவர்களின் ரிக்ஷா பயணத்தை வைத்துக் கேலியாக விமர்சித்து எதிர்மறையான கருத்துகளைப் பதிவிட்டனர்.

இந்நிலையில், தங்களை விமர்சித்தவர்களுக்கு அமைதியான முறையில் பதிலளிக்கும் விதமாக அந்தத் தம்பதி தற்போது ஒரு புதிய வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். அதில், மனைவி மிகவும் சாதுரியமாகக் காரை ஓட்டிக்கொண்டிருக்க, அருகில் அமர்ந்திருக்கும் அபிஷேக் முகர்ஜி ‘படே அச்சே லக்தே ஹை’ (Bade Achhe Lagte Hain) என்ற பிரபல இந்திப் பாடலை ரசித்துப் பாடுகிறார்.

Advertisement

காரின் பின்புற இருக்கையில் அமர்ந்திருக்கும் அவர்களது மகனும் இந்தப் பாடலைக் கேட்டுச் சிரித்தபடி மகிழ்ச்சியாகப் பயணம் செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வேகமாகப் பரவி வருகிறது.

இந்தப் புதிய வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், தம்பதியின் அன்பையும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். முன்பு ரிக்ஷா பயணத்தை வைத்துக் கேலி செய்தவர்களுக்கு இதுவே சரியான பதிலடி என்றும், ஒருவரின் உண்மையான மகிழ்ச்சி என்பது அவர் பயணிக்கும் வாகனத்திலோ அல்லது பொருளாதார நிலையிலோ இல்லை, குடும்பத்துடன் செலவிடும் அன்பான தருணங்களில்தான் உள்ளது என்றும் பலர் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in