LATEST NEWS
ஒரே ஒரு கிளாஸ் தான்… அடுத்த நிமிடமே.. காலாவதியான மதுவை குடித்ததால் நேர்ந்த கொடூரம்.. பள்ளிக்கு அருகில் கதறி துடித்த இளைஞர்கள்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் மது அருந்திய மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர். கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு அருகே மூவரும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்திய சில நிமிடங்களிலேயே அவர்களின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. பதறிய உறவினர்கள் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இளைஞர்கள் காலாவதியான மதுவை அருந்தியதாலேயே உயிரிழந்ததாகப் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனினும், உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் குறித்துக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்தச் சம்பவம் நிதௌலி கலா பகுதியில் உள்ள கிஷோர்சிங்பூர் கிராமத்தில் நடந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் அஜித் (18), ஜீத்து (21) மற்றும் சிவகுமார் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் உறவினர்கள் என்பதோடு நெருங்கிய நண்பர்களுமாவர். சம்பவத்தன்று இவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பள்ளிக்கு அருகே மது விருந்து கொண்டாடியுள்ளனர். ஆனால், மது அருந்திய சிறிது நேரத்திலேயே அவர்களின் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.
மூன்று இளைஞர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட ஆட்சியர் எச். அருண் மௌலி மற்றும் காவல் கண்காணிப்பாளர் இளமாறன் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடல்களைக் கைப்பற்றிய காவல்துறை, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்பிற்கான உண்மைத் காரணம் தெரியவரும் என்றும், அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
