LATEST NEWS
“3 பெண்களுடன் தகாத உறவு” சீன உளவாளி சர்ச்சை.. அம்பலமான உண்மை.. ஜென்சனுக்கு போன் போட்ட டிரம்ப் – வெளியான பரபரப்பு பின்னணி..!!
என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங், சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹூவாங் மற்றும் நிறுவனத்தின் மேலும் இரண்டு பெண் ஊழியர்களுடன் தகாத உறவில் இருந்ததாகத் தொடர் சர்ச்சைகள் எழுந்தன.
இதனால் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி மற்றும் பங்குச் சரிவைத் தொடர்ந்து, 1992 முதல் நிறுவனத்தை வழிநடத்தி வந்த ஜென்சன் ஹுவாங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், கோலெட் கிரெஸ் இடைக்கால சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே ஜென்சனிடம் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அவர் ஒரு கண்ணியமான மனிதர் எனக் குறிப்பிட்டதோடு, அப்பெண் உளவாளி என்பது ஜென்சனுக்குத் துளியும் தெரியாது என்ற பதிலை நம்புவதாகவும் FBI விசாரணை நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பதவியை விட்டு விலக வேண்டாம் என ஜென்சனுக்கு அறிவுரை வழங்கிய டிரம்ப், ஒருவேளை மாற்று சிஇஓ நியமிக்கப்பட்டால் முன்னாள் ஆப்பிள் சிஇஓ டிம் குக் அதற்குப் பொருத்தமாக இருப்பார் எனத் தனது சமூக வலைதளத்தில் பரிந்துரைத்துள்ளார்.
