“சினிமா பாணியில் நடந்த மெகா கொள்ளை..” விபத்து போல் நாடகமாடி காரிலிருந்த ரூ.14 லட்சம் அபேஸ் செய்த கும்பல்.. வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“சினிமா பாணியில் நடந்த மெகா கொள்ளை..” விபத்து போல் நாடகமாடி காரிலிருந்த ரூ.14 லட்சம் அபேஸ் செய்த கும்பல்.. வைரலாகும் வீடியோ..!!

Published

on

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள படேல் நகர் பகுதியில், கவனத்தைத் திசைதிருப்பும் விதமாகத் திட்டமிட்டு இருசக்கர வாகன விபத்தை ஏற்படுத்தி, காரில் இருந்த 14 லட்சம் ரூபாய் பணத்தைத் திருடிய வழக்கில் 7 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். சாலையில் விபத்து நடந்தது போல் நாடகமாடி காரில் இருந்தவர்களின் கவனத்தைத் திசைதிருப்பிய அந்தக் கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் வைக்கப்பட்டிருந்த பணப்பையைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியது.

இந்தத் துணிகரத் திருட்டுச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி இச்சம்பவத்தில் தொடர்புடைய 7 குற்றவாளிகளை மடக்கிப் பிடித்துக் கைது செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இதுவரை 3.02 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பணத்தை மீட்கும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in