அரசியல் வட்டாரத்தில் அடுத்த ஷாக்..! பள்ளிக் கழிவறை பராமரிப்பில் மெகா ஊழல்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றசாட்டு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அரசியல் வட்டாரத்தில் அடுத்த ஷாக்..! பள்ளிக் கழிவறை பராமரிப்பில் மெகா ஊழல்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றசாட்டு..!!

Published

on

பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் 5,626 பள்ளிகளில் சுமார் 80 சதவீதம் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக ஆதவ் அர்ஜுனா கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில், அந்தப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது மொத்தம் 15,661 கழிவறைகள் பயன்படுத்த முடியாத மிக மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் கழிவறை பராமரிப்பு சார்ந்த இந்தப் பிரச்சினை கடந்த 20 ஆண்டுகாலமாக தீர்க்கப்படாமல் நீடித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாணவர்களின் நலனைப் பாதிக்கும் இந்த அவல நிலையை மாற்றியமைக்கவும், பழுதடைந்துள்ள கழிவறைகளைச் சீரமைக்கவும் அடுத்த 2 ஆண்டுகளில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு சரிசெய்ய முடிவு செய்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மேலும், பள்ளிக் கட்டிடப் பராமரிப்பு மட்டுமின்றி பொதுப்பணித்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு திட்டங்களிலும் பல ஊழல்கள் நடந்துள்ளதாக அவர் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார். பொதுப்பணித்துறையின் செயல்பாடுகள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து அவர் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in