அய்யோ கடவுளே.. அப்பளம் போல் நொறுங்கிய மினி பஸ்.. 23 உயிர்களைக் காவு வாங்கிய கோர விபத்து.. நேருக்கு நேர் மோதிய கல்லூரி பேருந்து – லாரி.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அய்யோ கடவுளே.. அப்பளம் போல் நொறுங்கிய மினி பஸ்.. 23 உயிர்களைக் காவு வாங்கிய கோர விபத்து.. நேருக்கு நேர் மோதிய கல்லூரி பேருந்து – லாரி.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!

Published

on

அசாம் மாநிலம் காசிரங்கா தேசியப் பூங்கா அருகே உள்ள ரங்காஜன் பகுதியில் நேற்று பிற்பகல் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். போகாக்கட்டிலிருந்து நாகோன் நோக்கி 35-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுடன் சென்று கொண்டிருந்த டிராவலர் மினி பஸ், எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் இந்தக் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. மோதிய வேகத்தில் மினி பஸ் முற்றிலும் உருகுலைந்த நிலையில், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து வாகனத்திற்குள் சிக்கியிருந்தவர்களைப் போராடி மீட்டனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக கோஹோரா மாதிரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், படுகாயமடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக ஜோர்ஹாட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்தில் 23 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்திய கோலாகாட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்வப்நீல் தேகா, மீட்புப் பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். காசிரங்கா பூங்கா பகுதியில் விதிக்கப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாடுகளை மீறி மினி பஸ் அதிவேகமாகச் சென்றதால், ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

மாணவர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்த இந்தத் துயரச் சம்பவம் அசாம் மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எக்ஸ் தளம் வாயிலாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஒட்டுமொத்த மாநிலமும் அவர்களுக்குத் துணையாக நிற்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு எவ்விதத் தாமதமும் இன்றி உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்குவதே அரசின் உடனடி முன்னுரிமை எனத் தெரிவித்துள்ள அவர், அமைச்சர் அதுல் போரா சம்பவ இடத்திலேயே தங்கியிருந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நேரடியாகக் கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in