“நள்ளிரவு சாலையில் காத்திருந்த எமன்..!” வேகத்தடையில் ஏறி பறந்து விழுந்த பைக் ஓட்டுநர்… நெஞ்சை பதற வைக்கும் டாஷ்கேம் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“நள்ளிரவு சாலையில் காத்திருந்த எமன்..!” வேகத்தடையில் ஏறி பறந்து விழுந்த பைக் ஓட்டுநர்… நெஞ்சை பதற வைக்கும் டாஷ்கேம் வீடியோ..!!

Published

on

கிரேட்டர் நொய்டா மேற்கில் உள்ள 130 மீட்டர் அகல சாலையில், எவ்வித முன்னறிவிப்புப் பலகையோ அல்லது வெள்ளைக் குறியீடுகளோ இல்லாமல் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையால் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் அந்தச் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டுநர் ஒருவர், இருட்டில் வேகத்தடை இருப்பதைக் கவனிக்காமல் அதன் மீது வேகமாக ஏறியுள்ளார். இதனால் நிலைதடுமாறிப் பறந்து கீழே விழுந்த அவர், சாலையில் நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டுப் படுகாயமடைந்தார்.

இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அனைத்தும், அந்த இருசக்கர வாகனத்திற்குப் பின்னால் வந்த காரின் டாஷ்கேமில் துல்லியமாகப் பதிவாகியுள்ளன. பைக் வேகத்தடையில் ஏறித் தூக்கி வீசப்படும் இந்தப் பதைபதைக்க வைக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்குத் தெரியும் வகையில் வேகத்தடைகளில் வெள்ளை வண்ணம் பூசப்படாததும், ஒளிரும் பிரதிபலிப்பான்கள் பொருத்தப்படாததுமே இந்த விபத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சாலைப் பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் அலட்சியம் குறித்துப் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் அமைக்கப்பட்டுள்ள இதுபோன்ற வேகத்தடைகளால் இரவு நேரங்களில் தொடர்ந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால், உடனடியாக அனைத்து வேகத்தடைகளிலும் வண்ணக் குறியீடுகள் மற்றும் எச்சரிக்கைப் பலகைகளை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in