LATEST NEWS
“எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அடுத்த பேரிடி..” தவெக அமைச்சர் செங்கோட்டையனுடன் வேலுமணி நீண்ட நேரம் ஆலோசனை.. கொங்கு மண்டலத்தில் வெடிக்கப்போகும் அரசியல் பூகம்பம்..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில், தமிழக வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் நேரில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவை வீழ்த்தி தவெக ஆட்சியைப் பிடித்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பலர் தவெகவில் இணைந்து வருவதால் அக்கட்சி தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. ஏற்கெனவே சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாட்டிற்கு மாறாக எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் கோவையில் டிடிவி தினகரனைச் சந்தித்துப் பேசிய வேலுமணி, தற்போது அமைச்சர் செங்கோட்டையனையும் சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பொள்ளாச்சியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தவெக மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.பி-யுமான மகேந்திரன் ஆகியோரும் உடனிருந்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதிமுகவில் இருந்தபோதே எடப்பாடி பழனிசாமியைத் தீவிரமாக எதிர்த்த செங்கோட்டையன், மேலும் சில அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெகவில் இணையவுள்ளதாகக் கூறி வரும் சூழலில், கொங்கு மண்டலத்தின் முக்கியப் புள்ளியான எஸ்.பி. வேலுமணியுடனான இந்தச் சந்திப்பு அரசியல் களத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, வரும் நாட்களில் அதிமுகவில் மிகப்பெரிய அதிரடி மாற்றங்கள் நிகழக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
