“லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்குமா?” திடீரெனெ ஆடைகளை கழற்றி வருவாய்த்துறை அதிகாரி மீது வீசிய நபர்.. அரசு அலுவலகத்தில் உச்சகட்ட ரகளை..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்குமா?” திடீரெனெ ஆடைகளை கழற்றி வருவாய்த்துறை அதிகாரி மீது வீசிய நபர்.. அரசு அலுவலகத்தில் உச்சகட்ட ரகளை..!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்ட வருவாய்த் துறை அலுவலகத்தில், 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து மதிப்புச் சான்றிதழ் (Solvency Certificate) பெறுவதற்காக 20 ஆயிரம் ரூபாய் அரசு ரசீது போடுவது தொடர்பாக ஒப்பந்ததாரர் ஒருவர் கடும் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அலுவலகத்தில் பணியிலிருந்த எழுத்தர் குல்தீப் குமாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த அந்த ஒப்பந்ததாரர் தனது ஆடைகள் மற்றும் காலணிகளைக் கழற்றி எழுத்தர் மீது வீசி எறிந்தார்.

Advertisement

சான்றிதழ் வழங்குவதற்காகத் தன்னிடம் லஞ்சம் கேட்கப்பட்டதாகவும், பணம் தராததால் தனது கோப்பு வேண்டுமென்றே நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் அந்த ஒப்பந்ததாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், அரசு விதிமுறைப்படி 20 ஆயிரம் ரூபாய் கட்டண ரசீது போடாமல் சான்றிதழ் வழங்குமாறு ஒப்பந்ததாரர் அழுத்தம் கொடுத்ததாகவும், அதற்கு மறுத்ததாலேயே அவர் அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டதாகவும் எழுத்தர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in