இனி பள்ளி வளாகங்களில் அரசியல் கட்சிகளுக்கு அனுமதி இல்லை.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இனி பள்ளி வளாகங்களில் அரசியல் கட்சிகளுக்கு அனுமதி இல்லை.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

Published

on

பள்ளி வளாகங்களை எந்தவொரு அரசியல் கட்சி நடவடிக்கைக்கும், கல்வி சாராத பிற நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தக் கூடாது எனத் தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளின் புனிதத்தன்மையையும் கல்விச் சூழலையும் பாதுகாக்கும் வகையில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (DEO) பள்ளிக்கல்வித் துறை சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்தச் சுற்றறிக்கையில், பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், உரிய முன் அனுமதி இல்லாமல் வெளியாட்கள் யாரையும் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களுக்குக் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in