“இனி தப்பிக்கவே முடியாது..” எந்த நாட்டில் இருந்தாலும் உடனடி கைது… டாஸ்மாக் ஊழல் வழக்கில் சிக்கிய ரத்தீஷ்க்கு இன்டர்போல் வைத்த செக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இனி தப்பிக்கவே முடியாது..” எந்த நாட்டில் இருந்தாலும் உடனடி கைது… டாஸ்மாக் ஊழல் வழக்கில் சிக்கிய ரத்தீஷ்க்கு இன்டர்போல் வைத்த செக்..!!

Published

on

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானக் கொள்முதல், பார் உரிமம் மற்றும் போக்குவரத்து டெண்டர் ஆகியவற்றில் சுமார் ரூ. 1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படும் ரத்தீஷ் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று தலைமறைவானதைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்வதற்காக ஏற்கனவே ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விசாரணை அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று சர்வதேச காவல் வலையமைப்பான இன்டர்போல் அமைப்பு தற்போது ரத்தீஷ்க்கு எதிராக அதிகாரப்பூர்வமாக ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ பிறப்பித்துள்ளது.

Advertisement

இன்டர்போல் என்பது உலகளாவிய சர்வதேச காவல் வலையமைப்பாகும். ரெட் கார்னர் நோட்டீஸ் என்பது, ஒரு நபரைச் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அவர் எந்த நாட்டில் இருந்தாலும் அந்நாட்டுக் காவல்துறையினர் அவரை உடனடியாகக் கைது செய்து நாடு கடத்துவதற்காகப் பிறப்பிக்கப்படும் மிக உயரிய எச்சரிக்கை அறிவிப்பாணை ஆகும்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in