டாஸ்மாக் ₹1,000 கோடி ஊழல்..! வெளிநாட்டில் பதுங்கிய ரத்தீஷுக்கு இன்டர்போல் வலை.. செந்தில்பாலாஜிக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

டாஸ்மாக் ₹1,000 கோடி ஊழல்..! வெளிநாட்டில் பதுங்கிய ரத்தீஷுக்கு இன்டர்போல் வலை.. செந்தில்பாலாஜிக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி..!!

Published

on

டாஸ்மாக் ₹1,000 கோடி முறைகேடு வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள முக்கிய நபரான ரத்தீஷ் ராஜ் சண்முகவேலைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. ஏற்கெனவே அமலாக்கத்துறை அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்த நிலையில், தற்போது சர்வதேச காவல் அமைப்பான இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அவர் எந்த நாட்டில் பதுங்கியிருந்தாலும், அந்நாட்டு விமான நிலையங்கள் மற்றும் காவல்துறை உதவியுடன் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான சட்டப்பூர்வப் பணிகள் தொடங்கியுள்ளன.

கடந்த ஆட்சிக்காலத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானக் கொள்முதல், பார் உரிமம் வழங்குதல், போக்குவரத்து டெண்டர் மற்றும் அதிகாரிகள் பணியிட மாற்றம் ஆகியவற்றில் சுமார் ₹1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த முறைகேடுகளில் ரத்தீஷ் முக்கியப் பங்கு வகித்ததாக விசாரணை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதால் விசாரணையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்த இந்த சர்வதேச நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், செந்தில்பாலாஜி ஏற்கெனவே முன்ஜாமீன் பெற்றுள்ளார். இருப்பினும், ரத்தீஷ் கைது செய்யப்பட்டு அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த கூடுதல் ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. அவ்வாறு முக்கியத் தடயங்கள் சிக்கினால், இவ்வழக்கில் செந்தில்பாலாஜி மற்றும் தொடர்புடைய மற்ற நபர்கள் மீது அடுத்தகட்டக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயக்கூடும் என அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in