FLASH: வங்கக்கடலில் உருவாகிறது ‘அக்வான்’ புயல்.. சென்னைக்கு 860 கி.மீ. தொலைவில் மையம்… வெளுத்து வாங்கப் போகும் கனமழை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

FLASH: வங்கக்கடலில் உருவாகிறது ‘அக்வான்’ புயல்.. சென்னைக்கு 860 கி.மீ. தொலைவில் மையம்… வெளுத்து வாங்கப் போகும் கனமழை..!!

Published

on

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னைக்குத் தென்கிழக்கே சுமார் 860 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ‘அக்வான்’ (Aqwan) புயலாக வலுவடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் சின்னம் காரணமாகக் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அரசுத் தரப்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும், அவசியத் தேவைக்காக வெளியில் செல்வோர் குடை மற்றும் ரெயின்கோட் ஆகியவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in