“தனியாகப் பேச வேண்டும்..” என கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்த காதலன்.. அறைக்குள் 26 வயது இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம் என்ன..? போலீஸை ஏமாற்ற ரயில் நிலையம் மாறி மாறித் தப்பியோடிய பகீர் பின்னணி…!! – cinefeeds
Connect with us

CRIME

“தனியாகப் பேச வேண்டும்..” என கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்த காதலன்.. அறைக்குள் 26 வயது இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம் என்ன..? போலீஸை ஏமாற்ற ரயில் நிலையம் மாறி மாறித் தப்பியோடிய பகீர் பின்னணி…!!

Published

on

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவின் பரானகர் பகுதியில், பப்ஜி விளையாட்டின் மூலம் காதலித்த 26 வயது இளம்பெண்ணை அவரது காதலனே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரம் வீர் மற்றும் அஞ்சலி ஷா (26) ஆகிய இருவரும் பப்ஜி விளையாட்டின் மூலம் அறிமுகமாகி, கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், அதே பப்ஜி விளையாட்டின் மூலம் தரம் வீருக்கு மற்றொரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுடன் தரம் வீர் நெருக்கமாகப் பழகுவதைக் கண்ட அஞ்சலி ஷா, இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், காதலை முறித்துக் கொள்ளப் போவதாக அஞ்சலி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தரம் வீர், அஞ்சலியைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார்.

இதற்காகக் கொல்கத்தாவில் ஒரு விருந்தினர் மாளிகையை வாடகைக்கு எடுத்த தரம் வீர், தனியாகப் பேச வேண்டும் எனக் கூறி அஞ்சலியை அங்கு வரவழைத்துள்ளார். அங்கு வைத்துக் கனமான பொருளால் அஞ்சலியின் தலையில் தாக்கியதுடன், அவரது கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், அஞ்சலியின் வீட்டிலிருந்த தங்க நகைகள், செல்போன் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். காவல்துறையினரைத் திசைதிருப்புவதற்காக அஞ்சலியின் செல்போனைத் தன்னுடன் எடுத்துச் சென்ற அவர், ரயில் நிலையங்களை மாற்றிக்கொண்டே பயணம் செய்துள்ளார். இறுதியாக டெல்லி சென்றடைந்த தரம் வீரை, தீவிரமாகத் தேடி வந்த காவல்துறையினர் நவம்பர் 12-ஆம் தேதி அதிரடியாகக் கைது செய்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in