அய்யோ காப்பாத்துங்க.. வீட்டிற்கு வெளியே நின்றிருந்த பெண்.. திடீரெனப் பாய்ந்த குரங்கு கடித்துக் குதறிய கொடூரம்.. அதிர்ச்சி சிசிடிவி..!! – cinefeeds
Connect with us

CRIME

அய்யோ காப்பாத்துங்க.. வீட்டிற்கு வெளியே நின்றிருந்த பெண்.. திடீரெனப் பாய்ந்த குரங்கு கடித்துக் குதறிய கொடூரம்.. அதிர்ச்சி சிசிடிவி..!!

Published

on

குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில், தனது வீட்டிற்கு வெளியே நின்றிருந்த பெண் ஒருவரைக் குரங்கு ஒன்று திடீரெனத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு வெளியே இருந்த அந்தப் பெண் மீது பாய்ந்த குரங்கு, அவரைத் தொடர்ந்து கடித்துக் குதறியதில் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதனால் அலறித் துடித்த அப்பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

வதோதரா பகுதியில் சமீபகாலமாகக் குரங்குகளின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். குரங்குகளின் அட்டகாசத்தால் பெண்கள் மற்றும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படும் சூழல் உருவாகியுள்ளது. குரங்குகளால் ஏற்படும் இந்த ஆபத்தைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகச் செயல்படுவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in