குடிப்பழக்கத்தால் பிரிந்த மனைவி, கைவிட்ட தாய்… பழிவாங்கத் துடித்த மகனால் ஆந்திராவில் நடந்த பயங்கரம்…!! – cinefeeds
Connect with us

CRIME

குடிப்பழக்கத்தால் பிரிந்த மனைவி, கைவிட்ட தாய்… பழிவாங்கத் துடித்த மகனால் ஆந்திராவில் நடந்த பயங்கரம்…!!

Published

on

ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டத்தில், மது போதையில் இருந்த மகன் ஒருவர் தனது தாயைக் கத்தியால் கழுத்தறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடிப்பழக்கத்தால் மனமுடைந்த குற்றவாளியின் மனைவி கோபித்துக்கொண்டு தாய்வீட்டிற்குச் சென்ற நிலையில், தாயார் அகுலா சீதாராவம்மாவும் மடாலா கிராமத்தில் வசிக்கும் தனது மூத்த மருமகள் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார். சனிக்கிழமை அங்கு சென்ற மகன் பாஜி, வீட்டிற்குத் திரும்பி வருமாறும், தனது மனைவியையும் சமாதானப்படுத்தி அழைத்து வருமாறும் தாயிடம் வற்புறுத்தியுள்ளார்.

Advertisement

தாயார் உடன் வர மறுத்ததால் ஆத்திரமடைந்த பாஜி, வீட்டிலிருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய மூத்த மருமகள், தாயார் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்த நிலையில், தலைமறைவான மகனைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in