மக்களே உஷார்..! நிர்மலா சீதாராமன் பெயரில் ஷாக் கொடுக்கும் வீடியோ.. நம்பி ஏமாந்த்து ரூ.1.41 கோடியை இழந்த முதியவர்… பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

மக்களே உஷார்..! நிர்மலா சீதாராமன் பெயரில் ஷாக் கொடுக்கும் வீடியோ.. நம்பி ஏமாந்த்து ரூ.1.41 கோடியை இழந்த முதியவர்… பகீர் பின்னணி..!!

Published

on

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடுவன்னூரைச் சேர்ந்தவர் அப்துர்ரகிமான் (வயது 63). இவர் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுவது போன்ற ஒரு போலி வீடியோவை பார்த்தார். அதில், ஒரு குறிப்பிட்ட ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால், கவர்ச்சிகரமான வருவாய் கிடைக்கும் என்று கூறுவதுபோல் இருந்தது.

அதை உண்மை என நம்பி, அதனுடன் இடம்பெற்ற இணைப்பை அழுத்தி, மோசடி கும்பலின் உத்தரவுக்கேற்ப செயல்பட்டார். அக்கும்பல் சொன்ன 2 வங்கிக்கணக்குகளில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை ரூ.1 கோடியே 41 லட்சத்தை 30 பரிவர்த்தனைகள் மூலம் செலுத்தினார்.

Advertisement

ஆனால், உறுதி அளித்தபடி அவருக்கு வருவாய் கிடைக்கவில்லை. செலுத்திய பணமும் திரும்ப கிடைக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, கோழிக்கோடு சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in