CRIME
நள்ளிரவில் தனிமையான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மனைவி… தேடிச் சென்ற சகோதரர்களுக்கு காத்திருந்த கொடூர காட்சி… கணவரின் மனிதநேயமற்ற செயல்..!!
தெலங்கானா மாநிலம் வாரங்கல் நகரின் கரீமாபாத் பகுதியில், ஆமிர் என்ற நபர் தனது மனைவி சமீனாவை இரும்புச் சங்கிலிகளால் கட்டி ஆள்நடமாட்டமற்ற இடத்தில் விட்டுச் சென்ற கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. குடிபோதையில் வீட்டை விற்ற பணத்தைச் செலவழித்ததையும், பிற தொடர்புகளையும் சமீனா எதிர்த்ததால் ஆத்திரமடைந்த ஆமிர், அவரைத் தனது சொந்த ஊருக்கு அருகிலுள்ள தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று கை, கால்களைச் சங்கிலியால் கட்டியுள்ளார்.
நள்ளிரவில் சமீனாவைத் தேடி வந்த அவரது சகோதரர்கள், அவர் சங்கிலியால் கட்டப்பட்டு அதிர்ச்சியில் உறைந்திருப்பதைக் கண்டு திகைத்தனர். இவ்வளவு பெரிய கொடுமை நடந்த பிறகும், ஆரம்பத்தில் குடும்பத்தினர் கணவனுடன் பேசி சமரசம் செய்து கொள்ளவே முயற்சித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மில்ஸ் காலனி காவல்துறையினர், சமீனாவைச் சங்கிலிகளிலிருந்து மீட்டுப் பாதுகாப்பாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சகோதரர்களின் புகாரின் பேரில் ஆமிர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
