“சூனியமா..? இல்ல மர்ம நோயா..?” 72 மணி நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“சூனியமா..? இல்ல மர்ம நோயா..?” 72 மணி நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள மலிஹாபாத் பகுதியில், கூலித் தொழிலாளியான ஆஷிஷ் என்பவரது குடும்பத்தில் அடுத்தடுத்து 72 மணி நேரத்திற்குள் மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியையே பெரும் சோகத்திலும் பீதியிலும் ஆழ்த்தியுள்ளது. நவம்பர் 9-ம் தேதி ஆஷிஷின் கடைசி மகனான 3 வயது குழந்தை தேவன்ஷிற்குத் திடீரெனக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பதறிப்போன குடும்பத்தினர் உடனடியாகக் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும், வழியிலேயே தேவன்ஷ் பரிதாபமாக உயிரிழந்தான்.

முதல் குழந்தையை இழந்த அதிர்ச்சியிலிருந்து குடும்பத்தினர் மீள்வதற்குள்ளாகவே, அடுத்த நாளான நவம்பர் 10-ம் தேதி அவர்களது மற்றொரு மகனான 6 வயது சிறுவன் கார்த்திக்கும் திடீரென உயிரிழந்தான். இரண்டு மகன்களையும் அடுத்தடுத்துப் பறிகொடுத்துத் துயரத்தில் மூழ்கியிருந்த அந்தக் குடும்பத்திற்கு, மூன்றாவது பேரிடியாக அவர்களது ஒரே மகளான 9 வயது சிறுமி லட்சுமிக்குத் திடீரெனக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லட்சுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், வெறும் மூன்று நாட்களில் தங்களது மூன்று குழந்தைகளையும் இழந்து ஆஷிஷின் குடும்பம் நிர்க்கதியாக நிற்கிறது.

Advertisement

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்ததால், இது சூனியம் அல்லது மாந்திரீகத்தால் நடந்ததா, இல்லை ஏதேனும் மர்ம நோயின் தாக்கமா என்ற அச்சம் கிராம மக்களிடையே எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த தலைமை மருத்துவ அதிகாரியின் உத்தரவின் பேரில், சுகாதாரத் துறை குழுவினர் அந்தக் கிராமத்திற்கு நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இருப்பினும், மூன்று குழந்தைகளின் மரணத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மருத்துவப் பரிசோதனை முடிவுகளுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in