“இரண்டும் பொம்பள பிள்ளை பெத்துருக்க” சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி வரதட்சணைக் கொடுமை… காதலித்து மணந்த கணவனே எமனான கொடூரம்.. மனைவி எடுத்த விபரீதம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“இரண்டும் பொம்பள பிள்ளை பெத்துருக்க” சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி வரதட்சணைக் கொடுமை… காதலித்து மணந்த கணவனே எமனான கொடூரம்.. மனைவி எடுத்த விபரீதம்..!!

Published

on

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை ஊரக மண்டலத்திற்குட்பட்ட பெத்த லிங்கரெட்டிபள்ளி கிராமத்தில், இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்ததாலும், சாதி ரீதியான பாகுபாடு காட்டி வரதட்சணைக் கொடுமைப்படுத்தியதாலும் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த முகமது சோஹேல் என்பவருக்கும், 25 வயதான மனிஷா என்கிற ஷாஹீனாவுக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகு இத்தம்பதிக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளுமே பெண் குழந்தைகளாகப் பிறந்ததால், கணவர் சோஹேல் மற்றும் அவரது குடும்பத்தினர் மனிஷாவுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இரண்டுமே பெண் குழந்தைகளாகப் பெற்றெடுத்துவிட்டதாகக் கூறியும், மனிஷா தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் எனச் சாதி ரீதியாக இழிவுபடுத்தியும் அவர்கள் மனரீதியாகத் துன்புறுத்தியுள்ளனர். மேலும், கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு வலியுறுத்தி சோஹேல் அவரை உடல்ரீதியாகவும் சித்திரவதை செய்துள்ளார்.

Advertisement

கணவர் மற்றும் புகுந்த வீட்டாரின் கொடுமை தாங்காமல் மனிஷா ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், போலீசார் இருதரப்பினரையும் அழைத்து அறிவுரை (Counselling) வழங்கி அனுப்பியுள்ளனர். ஆனால், அதன் பிறகும் கணவர் மற்றும் மாமியார் வீட்டாரின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படாமல், கொடுமைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மனிஷா, வீட்டில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து மனிஷாவின் தாயார் ரேணுகா அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in