பெரும் பரபரப்பு..! பாலத்தில் சென்று கொண்டிருந்த 2 லாரிகள்… அடுத்த நொடியே இடிந்து விழுந்த இரும்புப் பாலம்..! அதிகாலையில் நடந்த திகில் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பெரும் பரபரப்பு..! பாலத்தில் சென்று கொண்டிருந்த 2 லாரிகள்… அடுத்த நொடியே இடிந்து விழுந்த இரும்புப் பாலம்..! அதிகாலையில் நடந்த திகில் சம்பவம்..!!

Published

on

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா அருகே பாக்ரா கால்வாயின் குறுக்கே அமைந்திருந்த இரும்புப் பாலம் இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. பாட்டியாலா – சங்ரூர் புறவழிச்சாலையில் உள்ள பாசியானா கிராமம் அருகே அமைந்துள்ள இந்தப் பாலத்தை 2 லாரிகள் கடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பாலம் இடிந்து விழுந்து அதில் 2 லாரிகளும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டன. இதில் ஒரு லாரியில் திடீரென தீப்பிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தைத் தொடர்ந்து தீப்பிடித்த லாரியின் தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து, மேலும் சேதம் ஏற்படாமல் தடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Advertisement

இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலம் இடிந்து விழுந்ததற்கான சரியான காரணம் குறித்து இதுவரை தெரியவரவில்லை என்றாலும், இச்சம்பவத்தால் பாட்டியாலா – சங்ரூர் புறவழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in