“உண்மையான காதல்னா இதுதான்..” அவ மட்டும் இல்லன்னா நான் எப்பவோ செத்திருப்பேன்… பிச்சை எடுத்து உயிர் காத்த மனைவிக்காகக் கோவில் கட்டும் கணவன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உண்மையான காதல்னா இதுதான்..” அவ மட்டும் இல்லன்னா நான் எப்பவோ செத்திருப்பேன்… பிச்சை எடுத்து உயிர் காத்த மனைவிக்காகக் கோவில் கட்டும் கணவன்..!!

Published

on

குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள கோத்ரா பகுதியில், கணவன்-மனைவி இடையிலான அழியாத அன்பு, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 65 வயதான பாபுபாய் லீம்பா என்பவர், மறைந்த தனது மனைவி சுங்காடிபென்னின் நினைவாகத் தனது விளைநிலத்தில் கோவில் கட்டி வருகிறார். சுமார் 19 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு கடுமையான விபத்தில் குடும்பம் துயரத்தில் ஆழ்ந்தபோது, வீட்டிலிருந்த பாத்திரங்களை விற்றும், வீதி வீதியாகச் சென்று பிச்சை எடுத்தும் சிகிச்சை அளித்து பாபுபாயின் உயிரைக் காப்பாற்றியவர் சுங்காடிபென். அதனாலேயே அவர் தனது மனைவியைக் கடவுளுக்குச் சமமாகப் போற்றுகிறார்.

2007-ஆம் ஆண்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட கோர விபத்தில், பாபுபாய் லீம்பாவின் இடது கை துண்டானது. அப்போது 6 குழந்தைகளைக் கொண்ட அந்தக் குடும்பத்திற்கு அவரே ஒரே வருமானம் ஈட்டும் நபராக இருந்தார். இந்த விபத்திற்குப் பிறகு, இரண்டு வேளை உணவிற்கும் பாபுபாயின் விலையுயர்ந்த சிகிச்சைக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்த இக்கட்டான சூழலிலும் மனம் தளராத சுங்காடிபென், கணவரின் உயிரைக் காப்பாற்ற வீட்டுப் பாத்திரங்களை விற்றார். அதிலும் போதிய பணம் கிடைக்காததால், ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுத்து, கணவரை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று போராடி அவரது உயிரைக் காப்பாற்றினார்.

Advertisement

கடந்த ஆண்டு சுங்காடிபென் காலமானதைத் தொடர்ந்து, பாபுபாய் மிகுந்த மனவேதனைக்கு ஆளானார். தனது வாழ்க்கைத் துணையின் தியாகத்தை என்றென்றும் நிலைநிறுத்தும் விதமாக, கோத்ராவின் அப்ராம் பட்டேல் கே முவாடா பகுதியில் உள்ள தமது நிலத்தில் அவருக்குக் கோவில் கட்ட முடிவு செய்தார். தற்போது கோவில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்த நற்செயலுக்கு அவரது 15 உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக் குடும்பத்தினரும் முழு ஆதரவு அளித்து வருகின்றனர். மனைவியைப் பற்றிக் குறிப்பிடும்போது உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விடும் பாபுபாய், “கடினமான காலத்தில் என் மனைவி மட்டும் துணை நின்றிருக்கவில்லை என்றால், நான் எப்போதோ இறந்திருப்பேன்; இந்தக் கோவில் வரும் தலைமுறையினருக்கு அவரது தன்னலமற்ற அன்பையும் தியாகத்தையும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும்” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in