CRIME
“ஐயோ ஆவி துரத்துது”7 பேரை ஆட்டுக்கல்லால் அடித்துக் கொன்ற கொடூரன்!… இரவில் ஆவி துரத்துவதாகப் பயந்து கோவில் கோவிலாகச் சுற்றிய அதிர்ச்சி வாக்குமூலம்..!!
பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை ஆட்டுக்கல்லால் அடித்துக் கொன்ற கார் ஓட்டுநர் இந்துசேகர், இறந்தவர்களின் ஆவி தன்னைத் துரத்துவதாகப் பயந்து கோவில் கோவிலாகச் சுற்றியதாகப் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த இந்துசேகர் என்பவர், சொத்து தகராறு மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக தனது மனைவி சுனிதா, மாமியார், இரண்டு மைத்துனர்கள், அவர்களின் மனைவியர் மற்றும் 7 வயது சிறுவன் என 7 பேரை அடுத்தடுத்து வீட்டிற்கு வரவழைத்து ஆட்டுக்கல்லால் அடித்துக் கொலை செய்தார். பின்னர், தனது 17 வயது மகளின் உதவியுடன் உடல்களை ஏற்காடு மற்றும் மைசூரு மலைப்பகுதிகளில் வீசிய நிலையில், இருவரும் ராஜாஜிநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்த இந்துசேகர், 7 பேரையும் கொன்றதில் தனக்குத் துளி கூட வருத்தமில்லை என்றும், ஆனால் அவர்கள் ஆவியாக வந்து தன்னைத் தொந்தரவு செய்வார்கள் என்ற பயத்தில் இரவு முழுவதும் தூங்காமல் தவித்ததாகவும் கூறியுள்ளார். தனது மகள் தைரியப்படுத்தியபோதும், ஆவி பயம் நீங்காமல் மன நிம்மதிக்காகக் கோவில் கோவிலாகச் சென்று பிரார்த்தனை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
