“பள்ளி முடிந்து வீடு திரும்பியவர்களுக்குக் காத்திருந்த எமன்…” ஸ்கூட்டரில் சென்ற 2 பெண் ஆசிரியைகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“பள்ளி முடிந்து வீடு திரும்பியவர்களுக்குக் காத்திருந்த எமன்…” ஸ்கூட்டரில் சென்ற 2 பெண் ஆசிரியைகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!

Published

on

தெலுங்கானா சூர்யாபேட்டை மாவட்டம் பீபிகுடெம் அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில், ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த இரண்டு பெண் ஆசிரியைகள் டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் சிவ்வெம்லா மினி குருகுலப் பள்ளியின் முதல்வர் ரஜிதா மற்றும் அதே பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை ரக்மா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பள்ளியில் தங்களது பணிகளை முடித்துவிட்டு இருவரும் ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த டிப்பர் லாரி இவர்கள் மீது மோதியதில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரே பள்ளியைச் சேர்ந்த முதல்வர் மற்றும் ஆசிரியை என இருவரும் விபத்தில் பலியான செய்தி சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in