LATEST NEWS
“விஜய் மேலே ஒரு துரும்பு கூட விழக் கூடாது”… உன் வேலையைப் பார்த்துட்டு போ.. அமைச்சரை ஒருமையில் பேசியது ஏன்..? வைகோ அதிரடி விளக்கம்..!!
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு அவர்களின் இறுதி ஊர்வலத்தில், முதலமைச்சர் விஜய் உடன் நடந்து சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமைச்சர் விஜய பார்த்திபனை நோக்கி ஆவேசமாகப் பேசியது குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
இறுதி ஊர்வலத்தின் போது கூட்டம் அதிகமாக இருந்ததால், முதலமைச்சர் விஜய்யின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவர் மீது ஒரு துரும்பு கூட விழாத அளவிற்குத் தான் அரணாக நின்று கூட்டத்தில் அழைத்துச் சென்றதாக வைகோ தெரிவித்துள்ளார். அந்தச் சூழலில் அமைச்சர் விஜய பார்த்திபன் தேவையில்லாமல் கையைக் குறுக்கே விட்டதால் தான் தாம் கோபமடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கூட்டத்தை ஒழுங்குபடுத்திச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இடையூறு ஏற்பட்டதாலேயே, “உன் வேலையைப் பார்த்துட்டு போ” என்று அவரிடம் கூறியதாகவும், அவர் ஒரு அமைச்சர் என்பது அந்த நேரத்தில் தனக்குத் தெரியாது என்றும் வைகோ தனது பேட்டியில் விளக்கமளித்துள்ளார்.
