“டீச்சர் ப்ளீஸ், எலும்பில் அடிக்காதீங்க…” டியூஷன் வகுப்பில் மாணவியைக் கதறக் கதற அடித்த ஆசிரியை.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“டீச்சர் ப்ளீஸ், எலும்பில் அடிக்காதீங்க…” டியூஷன் வகுப்பில் மாணவியைக் கதறக் கதற அடித்த ஆசிரியை.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

Published

on

தனியார் டியூஷன் வகுப்பில் பாடம் படிக்காததற்காகப் பள்ளி மாணவி ஒருவரை ஆசிரியை ஈவு இரக்கமின்றித் தாக்கும் நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கஃப்ர் எல்-ஷேக் மாகாணத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், “டீச்சர் தயவுசெய்து என் காலின் நடுப்பகுதியில் அடியுங்கள், எலும்பில் அடிக்காதீர்கள்” என அந்தச் சிறுமி கதறி அழுது கெஞ்சுவது பார்ப்பவர்களின் இதயத்தை நொறுக்குவதாக உள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இரண்டு வகுப்புகளுக்கு வராததாலும், வந்த வகுப்பிற்குப் பாடங்களைப் படித்து வராததாலும் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியை, மாணவியின் கைகளில் 12 முறை சரமாரியாக அடித்துள்ளார். அதோடு ஆத்திரம் அடங்காமல், மாணவியைக் கீழே படுக்க வைத்து உள்ளங்கால்களிலும் பிரம்பால் கொடூரமாக அடித்துத் தண்டனை கொடுத்துள்ளார்.

Advertisement

பாடம் கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியையே, பிஞ்சுக் குழந்தையிடம் இவ்வளவு கொடூரமாக நடந்துகொண்ட இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி கடும் கண்டனங்களைப் பெற்று வருகின்றன. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதுகாப்புத் துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in