சோனமுத்தா போச்சா..? 2 மாதங்களில் 2 திருமணங்கள்… நகை, பணத்துடன் எஸ்கேப் ஆன கல்யாண ராணி… ஒரே வீட்டிற்குச் சென்ற 2 மாப்பிள்ளைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

சோனமுத்தா போச்சா..? 2 மாதங்களில் 2 திருமணங்கள்… நகை, பணத்துடன் எஸ்கேப் ஆன கல்யாண ராணி… ஒரே வீட்டிற்குச் சென்ற 2 மாப்பிள்ளைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

Published

on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், போலிப் பெற்றோரை வைத்து அடுத்தடுத்து இரண்டு இளைஞர்களைத் திருமணம் செய்து நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டியைச் சேர்ந்த கார்த்திகா என்ற பெண், கடந்த செப்டம்பர் மாதம் தஞ்சாவூரைச் சேர்ந்த சித்தார்த்தன் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். திருமணமான சில நாட்களிலேயே கணவர் வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு கார்த்திகா மாயமானதாகக் கூறப்படுகிறது. இதே பாணியில், கடந்த நவம்பர் மாதம் நாமக்கல்லைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற இளைஞரையும் கார்த்திகா திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியுள்ளார்.

Advertisement

இதனிடையே, ஏமாற்றப்பட்ட இரண்டு மாப்பிள்ளைகளும் தங்களது மனைவியைத் தேடி கோவில்பட்டியில் உள்ள கார்த்திகாவின் வீட்டிற்குச் சென்றபோது, இருவருக்கும் ஒரே பெண்ணைத் திருமணம் செய்து வைத்து மோசடி செய்திருப்பது அம்பலமானது. மேலும், இந்தத் திருமணங்களின் போது கார்த்திகாவின் பெற்றோர் போல முனீஸ்வரி மற்றும் மாரியப்பன் ஆகியோர் நடித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், போலிப் பெற்றோராக நடித்த முனீஸ்வரி, மாரியப்பன் மற்றும் தலைமறைவாக உள்ள கார்த்திகா ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான கார்த்திகாவைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in