LATEST NEWS
FLASH:ஆபாச மெசேஜ் வந்ததாக கலெக்டர் புகார் அளிக்கவில்லை – தமிழ்நாடு அரசு பரபரப்பு விளக்கம்..!!
கள்ளக்குறிச்சி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இ. பத்மஜாவிடம் இருந்து எவ்விதப் புகாரும் வரவில்லை எனத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.
முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிற்கு அத்தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் வாட்ஸ்அப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகப் புகார்கள் எழுந்து தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த விவகாரத்தில் காவல்துறை ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கவுரி கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையமும் இது குறித்து விளக்கம் கோரியிருந்தது.
இந்நிலையில், இந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தமிழ்நாடு அரசு தரப்பில் தற்போது விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா தரப்பிலிருந்து காவல்துறைக்கோ அல்லது அரசுக்கோ எந்தவொரு புகாரும் அளிக்கப்படவில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
