“நான்தான் அவளைக் கொலை செய்தேன்”… நானும் சாகப் போகிறேன்… விடுதி அறையில் மாணவியைக் கொ**று கடிதம் எழுதி வைத்த காதலன்.. படுக்கையில் கிடந்த எலி மருந்து…!! – cinefeeds
Connect with us

CRIME

“நான்தான் அவளைக் கொலை செய்தேன்”… நானும் சாகப் போகிறேன்… விடுதி அறையில் மாணவியைக் கொ**று கடிதம் எழுதி வைத்த காதலன்.. படுக்கையில் கிடந்த எலி மருந்து…!!

Published

on

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதி அறையில் டெல்லி பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், காதலன் எழுதி வைத்த வாக்குமூலக் கடிதம் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குரேஷிபூர் கிராமத்தைச் சேர்ந்த அருணா என்ற மாணவி, டெல்லி பல்கலைக்கழகத்தின் காளிந்தி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.டெக் படித்து வந்தார். கடந்த திங்கட்கிழமை காலை கல்லூரிக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து புறப்பட்ட அருணா, மதியம் 3 மணி வரை குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அதன் பிறகு அவரது செல்போன் அணைக்கப்பட்டதோடு, இரவு வரை வீடு திரும்பாததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், செக்டார்-37 பகுதியில் உள்ள ஒரு விடுதி அறையிலிருந்து அருணா சடலமாக மீட்கப்பட்டார்; அவரது வாயில் நுரை தள்ளியிருந்ததோடு, படுக்கையில் எலி மருந்து கிடந்ததால் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

Advertisement

சம்பவம் நடந்த அறையில் காவல்துறையினர் சோதனை நடத்தியபோது, அருணாவுடன் அங்கு தங்கியிருந்த அவரது பக்கத்து வீட்டு இளைஞரான விபின் யாதவ் என்பவர் கையெழுத்திட்டு எழுதிய வாக்குமூலக் கடிதம் கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்தில், “நான்தான் இந்தப் பெண்ணைக் கொலை செய்தேன்; தற்போது நானும் ஆக்ரா கால்வாயில் குதித்துத் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், திங்கட்கிழமை மாலை விபின் யாதவ் அறையின் கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டுத் தப்பிச் செல்வது பதிவாகியுள்ள நிலையில், தடயங்களைக் கைப்பற்றிய காவல்துறையினர் தலைமறைவான விபின் யாதவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in