LATEST NEWS
இப்படியும் ஒரு ஆடம்பர திருமணமா? தரையில் சிதறிக் கிடந்த லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகள்… பணத்தைத் துடைப்பத்தால் கூட்டி அள்ளிய காட்சி…!!
பீகாரின் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவரான அனந்த் சிங்கின் மகள் திருமண விழாவில் பல லட்சம் ரூபாய் பணம் மழையாகப் பொழியப்பட்ட சம்பவம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. மிகவும் ஆடம்பரமாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்ற இந்தத் திருமணக் கொண்டாட்டத்தின் போது, கட்டுக்கட்டாகப் பணத்தாள்கள் வாரி இறைக்கப்பட்டுள்ளன.
விழா மேடையிலும் அரங்கத்தின் தரையிலும் ஏராளமான ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்ததால், அவற்றை வெறும் கைகளால் அள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தரையில் குவிந்து கிடந்த பணத்தாள்களைத் துடைப்பத்தால் (விளக்குமாறு) கூட்டி அள்ளி, அங்கு நடனமாடிக் கொண்டிருந்த கலைஞர்களிடம் வழங்கும் காட்சிகள் வெளியாகிப் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
திருமண விழாவின் இந்த உச்சகட்ட ஆடம்பரத்தையும் பிரம்மாண்டத்தையும் காட்டும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. பணத்தைத் துடைப்பத்தால் கூட்டி அள்ளும் இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
